யாழில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை

#SriLanka #sri lanka tamil news #srilanka freedom party #srilankan politics #Jaffna #Lanka4 #Local council
Prabha Praneetha
3 years ago
யாழில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை

யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சேர்க்கப்பட்டவர்களே இவர்கள் என்றும் அவர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமிகள் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தம்மை வேறு சிறுவர் இல்லங்களில் சேர்க்குமாறு கோரியுள்ளனர்” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சில் மாணவர் விடுதி என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4