ஈற்றில் இல்லை இங்கே நிலைத்தல் காணும். இடைவிடாத போரில் இனியும் எது மீஞ்சும்? - நதுநசி. இன்றைய கவிதை 05-04-2023.

ஈற்றில் இல்லை இங்கே
நிலைத்தல் காணும்.
***************************************
இடைவிடாத போரில்
இனியும் எது மீஞ்சும்?
இறுதியில் கூட ஒரு
இலக்கு இல்லாத போராக.
பசி கிடந்தவர் பார்
தினம் நடத்தும் போர்.
பசியாறியதும் அவர் தம்
போர் முடிந்தது காண்.
இலக்கெது இங்கே?
அவர் தாம் பெற்ற
வெற்றி ஏதோ சொல்லும்.
நாளையும் பசிக்கும்.
வீண் வம்புக்கு ஒரு
வீராப்புப் பேச்சு.
அது போடும் குட்டி
சண்டைகள் தோற்றம்.
நீண்டு வந்து ஒரு போர்
நாளை விழுங்கிப் போகும்.
தீர்வு வந்து சேரும்
சமாதானம் என்று ஒன்றாய்.
என்ன பயன் அப்போது.
இங்கே வாழ அந்த மனிதர்
மூப்பாகி கிளம் கண்டு
மூன்று காலில் நடப்பார்.
உழைத்துச் சேர்த்த
பொருளும் சேரும்.
பெருமை கூட வந்து
தானே ஒட்டிக் கொள்ளும்.
எல்லாம் கிடைத்ததாக
எண்ணம் மாறிப் போகும்.
ஏடும் வீடும் ஏன் என்றாகி
ஓடும் பாட்டும் கூடி குலாவும்.
ஓய்ந்து ஒடுங்கி அவர்
ஓய்யாரம் வெறுத்து
ஓளடதம் தேடி உண்ண
வந்து என்ன செய்யும்?
வாழ்ந்திட நடத்திய
போரினில் என்ன பயன்.
ஈற்றில் இல்லை நிலைத்தல்
இனியும் ஏனோ பிதற்றல்.
........ அன்புடன் நதுநசி.



