ஈற்றில் உயிர்கூட மூசித் தான் பிரியும். உரைப்பதில்  இருக்கு உங்கள் உணர்வுகள். - நதுநசி. இன்றைய கவிதை 06-04-2023.

#கவிதை #மரணம் #இன்று #தகவல் #லங்கா4 #Poems #Death #today #information #Lanka4
ஈற்றில் உயிர்கூட மூசித் தான் பிரியும். உரைப்பதில்  இருக்கு உங்கள் உணர்வுகள். - நதுநசி. இன்றைய கவிதை 06-04-2023.

ஈற்றில் உயிர்கூட
மூசித் தான் பிரியும்.
*********************************

உரைப்பதில்  இருக்கு
உங்கள் உணர்வுகள்.
இருந்தும் அவை இங்கே
எவை சார்ந்தோ சொல்ல.

ஈழப் போர் நேற்றல்ல.
நெடுநாளாக சுடர்
கொண் டெரிந்து செல்கிறது.
நீரும் நானும் காளான்.

உண்மை புரிந்து கொள்ள
ஏனோ கொஞ்சம் தயக்கம்.
உணர்வுகள் பேசும் போது
மனங்களுக்கு ஆறுதலே!

இறுதிப் போரில் என்று
எப்படிச் சொல்வீர் உறுதி?
ஆண்டுகள் கடந்த போதும்
ஆளுகை நீங்கவில்லை.

இடங்களில் தோன்றும்
கோபுரங்கள் வழி யந்த
இடங்கள் இனம் மாறுமோ?
மூடர் முயற்சி மாறவில்லை.

போரின் காரணம் 
ஏனோ இன்னும் 
மறைந்து போகவில்லை.
புரிந்திடக் கூடாதோ?

கஞ்சிக்கு ஏங்கியதும்
குண்டடி பட்டு ஆங்கே
வீழ்ந்து துடித்ததும்
தப்பிட ஓடியதும் நினைவில்.

நின்று தான் சொல்லும்.
ஒருபுறம் இப்படி எனின்.
மறுபுறம் ஈழ வீரர் போரில்
திகைத்த எதிரியும் உண்டே!

சிறிய நிலத்தில் அவர்
சிலரை கொல்ல பலர்
சில காலம் கடந்து பாரீர்
பல காலம் ஆனதே கேளீர்.

உலகம் சேர்ந்து கூடிய 
பெரும் போரில் எதிர்
தனி நின்ற தன் படையோடு
ஒரு மறவன் கதை எங்கே?

போரின் வடு எது? -அங்கே
போரை விட்டோடி
போரை பேசுதல் - ஏனோ?
எப்படி சரியோ ?

தோளோடு தோள் நின்று
ஆள் சேர்ந்து அந்த
போரை வெல்லும் 
திறன் எங்கே போனது?

கிட்லரை எதிர் நின்று
லெனின்கிராட் வெல்லும்
கதைகூட கிடக்கிறதே!
ஏன் மறந்தாரே அன்று?

கதை பேசும் போது
கோழைகளாக எஞ்சிய
முட்கம்பி சிறைகளில்
சிக்குண்டவர் கதை ஏன்?

நீண்ட போரில் ஒரு
உண்மை சொல்லும்.
எதிரி வந்து உம்மை
பாராட்டிட எண்ணாதீர்.

விட்ட தவறுகள் தேடி
இனியாகிலும் ஓடி.
முடிவுகள் எடுப்போம்.
நாளை ஒரு போர் தவிர்க்க.

பெருமை பேசுவதும்
துயரின் வலியதை 
பேசி பேசியே நாம்
இரக்கம் வாங்குவதும்.

வீணே எனப் புரிந்திடல்.
வீணாகும் மிச்ச வாழ்வும்
நலமாகிட சிந்தை தான்
கண்டு நடப்போம் நாமினி.

விட்ட தவறுகள் எம்மில்
நிறையவே இருக்கிறது.
எதிரி கூட வந்து எமை
ஒரு நாள் திட்டுவான்.

களம் நின்று எதிர் கொள்ளா
கோழைகள் நாமென்று.
புத்தி கொண்டு இனியாகிலும்
நிலை மாற்றிச் செல்வோம்.

முடிந்தது  போர் என்று
எதிரி சொனால் நம்பவோ?
கருவி கொண்டவன் நமை
கொல்ல மாண்டு போவதோ?

ஈற்றில் கூட மூசித் தான்
உயிர் போகும் தேடிப் பாரும்.
முடிவைக் கூட நாமே தான்
நாளையும் எழுத வேண்டும்.

                                                                                                  ......... அன்புடன் நதுநசி