மந்த போசாக்கு காரணமாக நரம்புகள் வலுவற்று போகாமலிருக்க இவைகளை தினமும் உணவில் சேருங்கள்.
உலகப் பொருளாதார சிக்கல் காரணமாக நம்மில் பலர் சத்தான உணவு வகைகளை உண்பதில்லை. அவர்களின் நரம்புகள் முறுக்குப் பெற்று வலிமையானதாக விளங்க பின்வரும் உணவு வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ளல் அவசியம்.
அத்திப்பழம்:
அத்திப்பழம் சாப்பிடுவதால் நரம்புகளுக்கு வலிமை தருகிறது. உடல் பலத்தை அதிகரிக்கிற சக்தி அத்திப்பழத்திற்கு உண்டு. அத்திப்பழத்தை தினமும் ஓன்று அல்லது இரண்டு பழம் சாப்பிடுவதால் நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கிறது. இது நரம்பு தளர்ச்சியை சரி செய்கிறது.
பிரண்டை:
உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி பிரண்டைக்கு உண்டு. பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு பலம் தருவதோடு நரம்புகளை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இதை வாரம் இரண்டு முறை சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
மாதுளை பழம்
நரம்பு மண்டலம் அதிகரிக்க மாதுளை பழம் சாப்பிடுவது நல்லது. மாதுளை பழம் சாப்பிடுவதால் உடல் சூட்டை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இது நரம்பு பிரச்சனைகளை சரி செய்து உடலை பலப்படுத்துகிறது.
நெல்லிக்காய்:
நெல்லிக்காயை பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது. நெல்லிக்காய் சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் வலுபெறுகிறது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மேலும் இது நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
வெற்றிலை:
வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இதை சாப்பிடுவதால் நன்கு பசியெடுக்கும். செரிமானக் கோளாறுகளைத் தடுக்கிறது. உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி இந்த வெற்றிலைக்கு உண்டு.
முருங்கைக் கீரை
முருங்கைக் கீரைக்கு நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி அதிகமாகவே உள்ளது. பலவிதமான சக்தியை தரக்கூடிய கண்கண்ட மருந்து என்றும் கூறலாம். வாரத்திற்கு 3 முறை இதை சமைத்து சாப்பிடுவதால் நரம்புகளுக்கு பலத்தை கொடுத்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இது கண் நரம்புகளை பாதிக்கும் செல்களை அளிக்கிறது. முருங்கைக் கீரை சாப்பிடுவதால் கண் நரம்புகள் பலம் பெற உதவுகிறது.
பேரிச்சைப்பழம்:
பேரிச்சைப்பழத்தை பாலில் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது. இதை சாப்பிடுவதால் நரம்புகள் மற்றும் எலும்புகள் பலம் பெறுகிறது. இதை சாப்பிடுவதால் பலகீனமான உடல் கூட பலம் பெறுகிறது.
பழங்கள்:
வயதானவர்கள் தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிடுவதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கீரைகள்:
நரம்புகள் பலம் பெற கீரைகள் நல்ல பலன் அளிக்கின்றன. பொதுவாக பொன்னாங்கண்ணி மற்றும் மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் நரம்புகளை பலப்படுத்துகிறது. தினமும் ஏதாவதொரு கீரைகளை சாப்பிடுவதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.