வெறும் காலில் நடப்பதால் உடலிக்கேற்படும் நன்மைகள் இவை.

#ஆரோக்கியம் #உடல் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Body #Antoni #Theva #Antoni Thevaraj
வெறும் காலில் நடப்பதால் உடலிக்கேற்படும் நன்மைகள் இவை.

நமது நாட்டில் பெரும்பாலானோர் நடக்கும் போது உள்ளக ரீதியாக வெறும் காலில் தான் நடப்பார்கள். ஆபிஸ் மற்றும் வெளியிடங்களிலேயே காலணியை அணிந்திருப்பார்கள். இன்று நாம் பார்க்கும் விடயம் என்னவென்றால் வெறும் காலில் நடப்பதால் உடலுக்கேற்படும் நன்மைகள் யாது என்பதாகும்.

பொதுவாக வெறும் காலில் நடந்தோம் என்றால் அது நமக்கு நல்ல சக்திகளை தருகிறது என்று மருத்துவ ரீதியான ஆய்வுகளில் சொல்கிறது.

  • வெறும் காலில் நடப்பதால் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் கிடைக்கிறது.
     
  • அதிகமாக நாம் மண், புல் மணல் பரப்பு மேல் நடப்பதால் பூமிக்கும் நமக்கும் இருக்கும் எலக்ட்ரான் உறவு பாலமாக அமைகிறது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
     
  • பூமியில் இருக்ககூடிய எலக்ட்ரான் எப்படி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று ஆய்வு அறிஞர்கள் சொல்கிறார்கள்.
     
  • இந்த ஆய்வில் மூளை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு வெறும் காலில் நடக்கவைத்து ஆய்வு செய்ததில் நிறைய மாற்றங்களை கண்டறிந்தார்கள்.
     
  • மேலும் ஆய்வு செய்ததில் வெறும் காலில் நடப்பதால் தோல் பராமரிப்பு திறன், மிதமான இதயத்துடிப்பு, மேம்படுத்தப்பட்ட குளுக்கோஸ் கட்டுப்பாடு, மன அழுத்தத்தை குறைகிறது, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று அந்த ஆராய்ச்சியில் சொல்லப்பட்டிருக்கிறது.
     
  • அதுமட்டும்மில்லாமல் சிவப்பு இரத்த அணுக்கள் மேம்பரப்பு சக்தி அதிகரிப்பதை கண்டறிப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள பாகும் தன்மையை குறைக்கிறது.
     
  • பாகு தன்மை அதிகமாக இருந்தால் அது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. வேலும் வெறும் காலில் நடப்பதால் அந்த நோயிலிருந்து தடுக்கிறது.
     
  • காலணிகள் அணியாமல் நடந்தால் அது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமலும் தடுக்கிறது என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு அரை மணி(1/2) நேரம் நடப்பதால் புற்றுநோய்களுடைய ஆபத்தை குறைக்க முடிகிறது.
     
  • அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிக எடை, நீரிழிவு பிரச்சனையிலிருந்து நம்மை காக்கிறது.
     
  • கூடுதல் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நோய் எதிர்ப்பு, உடலில் உள்ள நச்சு நீக்குதல் போன்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4