இன்று என்ன தடையோ...நேற்றுப் போல் இருக்கிறது எனக்கு. காற்றுப் போன  என் வண்டியை....-நதுநசி. இன்றைய கவிதை 08-04-2023.

#கவிதை #இன்று #தகவல் #லங்கா4 #Poems #today #information #Lanka4
இன்று என்ன தடையோ...நேற்றுப் போல் இருக்கிறது எனக்கு. காற்றுப் போன  என் வண்டியை....-நதுநசி. இன்றைய கவிதை 08-04-2023.

இன்று என்ன தடையோ
***************************************

நேற்றுப் போல்
இருக்கிறது எனக்கு.
காற்றுப் போன 
என் வண்டியை
உருட்டிப் போன
அந்த நாள் நினைவு.

வைக்கோலை தான்
கசக்கி உருட்டி
உள்ளே செருகிவிட்டு
காற்றுப் போல 
ஓட்டிச் சென்றேன்.
அன்றைய நாளில்.

என்னவென சொல்ல.
எதைத் தான் எப்படி
கிட்டவந்த இளசுக்கு
முளுசிப் பார்க்கும் முன்
சொல்லிச் செல்ல.
முன்னிருக்கையில் தான்.

கிளறிய கல்லும்
வீதியில் கதைக்கும்.
வண்டிச் சில்லும்
முட்டி மல்லுக்கு நிக்கும்.
என் கதை கேட்காதே!
அப்போது அவையெலாம்.

அடடா!... பாரடா இங்கே!
இப்போதென்ன இதுகாறும்
என் சொல் கேட்குமோ?
அறிவுரைத்த எனக்கிங்கு
ஆளுடைத்துப்  போகும்
பிஞ்சுகளிடையே காவோலை.

வைத்தியம் பாத்து வர
பக்கத்து ஊருக்கு போகனும்.
இந்த வண்டி மேல் ஏற்றி
ஏறி மிதித்துப் போனால்
எனக்கும் கூடவே இரண்டு
குழுசை வாங்கி வரவேணும்.

அன்று அப்படி வாழ்ந்தாலும்
நின்று பேசிப் போகும்
நாலு மனுசர் இருந்தாங்கள்.
இப்போது பாருங்களேன்.
வீடு தேடிப் போகினும் அங்கே
பேசிப் சிரிப்பதற்கு மனுசரில்லை.

காலம் மாறிப் போச்சு தான்.
இருந்தும் என்ன இப்போ
வாய் மாற்றியா உண்பார்கள்.
கரண்டி வைத்து உண்ண
கைகள் கரண்டி பற்றும்.
உணவின் உணர்வறியுமோ?

வண்டிக்கு காற்றுப் போனது.
இறப்பர் காற்றுப்பை வாங்க
கையில காசிருந்தும் பையில்லை.
பாழ்படுவார் போட்ட தடையது
பொருளாதார தடையாம். 
இன்று என்ன தடையோ?


                                                                                                               ..... அன்புடன் நதுநசி.