சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடந்தது. விழாவில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

#God #goddess #Temple
Mani
1 year ago
சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடந்தது. விழாவில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கரப்பள்ளி சக்கரவராகேஸ்வரர் கோயில் எழூர் பல்லக்கு  புறப்பாடு நடந்தது. இன்று பொம்மலாட்டம் விழா நடக்கிறது.

 அய்யம்பேட்டை அருகேயுள்ள சக்கரப்பள்ளி சக்கரவராகேஸ்வரர் கோவில் ஏழு கதவு பல்லக்கு புறப்பாடு நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை அருகே சக்கரப்பள்ளியில் தேவநாயகி அம்பாள் சக்கரவராகேஸ்வரர் கோவில் உள்ளது. விழா நாட்களில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடிய சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்தது.

நேற்று, மாகாளிபுரம், வாகத்தூர், சரபோஜிராஜபுரம், அரிய மங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதிகோவில் ஆகிய கிராமங்களுக்கு செல்வதற்காக, கோவிலில் இருந்து பல்லக்கு புறப்பட்டது. இரவு பசுபதிகோயில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) இலுப்பக்கொரை கிராமத்திற்கு சென்று மீண்டும் பசுபதிகோயில் மற்றும் அய்யம்பேட்டை ஊர்களில் வீதி உலா வருகிறது. இன்று மாலை அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு சுவாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகம், எழூர் கிராம மக்கள் செய்துள்ளனர். இன்று நடைபெறும் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சியையொட்டி, மாலை 4 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் வாகனங்கள் திருவையாறு, கபிஸ்தலம், பாபநாசம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாபநாசம், கபிஸ்தலம் திருவையாறு. வழியாகவும் இயக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். ,

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!