கவிதை. சொல்ல வந்ததை சொல்லிச் செல்ல வந்த வாய்ப்பு இந்தக் கவிதை.-நதுநசி. இன்றைய கவிதை 10-04-2023.
#கவிதை
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

கவிதை
*************
சொல்ல வந்ததை
சொல்லிச் செல்ல
வந்த வாய்ப்பு
இந்தக் கவிதை.
குறுகச் சொல்லி
பெருக விளக்கி
நேரம் அதை மிகச்
சிக்கனமாக தந்தது.
பேச்சோடு ஒரு
இலயத்தை தந்து
இச்சை வழியில்
சுவை ஊட்டுமஃது.
மொழிவழி அழகிய
சொற்கள் எல்லாம்
ஓசை ஒத்து ஒலிக்க
இரசித்து விளக்கும்.
விரைந்து சொல்லி
கடந்து நான் செல்ல
சொல்லிக் கொண்டு
தானிருக்கும் கவிதை.
கவர்ந்து வைத்து
கவர்ச்சியாக பேசும்
அழகிய மொழிவடிவம்
மொழியின் பொட்டு.
....... அன்புடன் நதுநசி.



