இலங்கையில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள்!

#SriLanka #weather #sun #hot #Sweat #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
3 years ago
இலங்கையில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள்!

சூரியனின்  வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (11) நண்பகல் 12.11 அளவில் கல்பிட்டி, துனுபொத்தகம, நிக்கவெவ, சோமாவதி விகாரை மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.


இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4