இன்றைய கவிதை 11-04-2023. இயன்று முயன்றால் முடியாதது இல்லை. - நதுநசி.
#கவிதை
#உழை
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#work
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

இயன்று முயன்றால்
முடியாதது இல்லை.
======================
இயன்றளவு நாம்
முயன்றோம் என்றால்
முடிந்திருக்க வேண்டும்.
இல்லை என்றால்....
இயன்றளவு நாம்
முயன்றது போதாது.
முடியவில்லை இன்னும்.
இனியும் முயல்வோம்.
விட்ட தவறு என்ன?
கேட்ட கேள்விக்கு
விடையஃது தேடுவோம்.
தவறைத் திருத்துவோம்.
விட்ட சிறு தவறும்
கேட்டுப் பேசும் வகை
விசாரணை காணும்.
தனியாளாக கூட வர.
உண்மை மட்டும் இங்கே
வெற்றி தந்து நிற்காது.
சமயோசிதமாக பொய்யும்
பேசிப் போதல் வேண்டும்.
உளறம் வாய்கள் தான்
வெறும் வகை சொல்லும்
சற்றும் தளராத துணிவோடு.
பேசிப் பேசியே கொல்லும்.
இறுதியில் நாம் விரும்பிய
வெற்றி வந்த சேரும்.
வழி வகை நன்றே என்றால்
தடைகள் கூட ஏற்றும்.
இச்சைக்கு இசைந்து
வெறி பிடித்தால் போல
வழி கண்டு ஓடல் தவறு.
தக்க சமயம் ஆக்கு.
....... அன்புடன் நதுநசி



