இன்றைய கவிதை 12-04-2023. குற்றம் எது சொல் சட்டம் ஏனோ காண்.- நதுநசி.

#கவிதை #சட்டம் #இன்று #தகவல் #லங்கா4 #Poems #Law #today #information #Lanka4
இன்றைய கவிதை 12-04-2023. குற்றம் எது சொல் சட்டம் ஏனோ காண்.- நதுநசி.

குற்றம் எது சொல்
சட்டம் ஏனோ காண்.
+++++++++++++++++++++++

சட்டம் வந்தது
என்னைக் காக்கும்.
காத்துக் கிடந்து 
ஏமாந்து போனேன்.

அட்டா!...அப்போது 
ஒன்றை  மறந்தேன்.
சட்டததை படைத்ததும்
நாம் தானே நினைத்தேன்.

குற்றம் எது சொல்லு.
நேற்று குற்றமற்றது.
இன்று குற்றமானது!
சூழல் வழி மாறும்.

தேவை வழி சட்டம்
அதை இயற்றி வாழ
கூட்டம் ஒன்று கற்கும்.
சட்டம் எனும் பாடம்.

நோக்கம் ஒன்று தான்.
ஏக்கம் போக்கும் வாழ்வு
ஆக்கிக் கொடுக்க தேவை
சட்டம் வழி வழி காணு.

காலம் ஓடும் போது
மக்கள் கூட்டம் பெருகும்.
அதன் வழி அதன் செயல்
சிக்கலாகிப் போகும்.

வரம்பு மீறல் கூடும்.
தேடித் தீர்த்தல் கடினம்.
மாற்றம் காண சட்டம்
போட்டு வரம்பு கட்டு.

மனங்கள் மாற்றும் 
சூழல் தடுத்து நிற்க.
காலம் மாறும் போதும்
சட்டம் மாறிப் போகும்.

வாழ்வு அமைதியாக
நல்ல சட்டம் தோன்றி 
வழிந்து போதல் வேண்டும்.
அப்போ குற்றம் ஏதோ?

                                                                                             ........ அன்புடன் நதுநசி.