இன்றைய கவிதை 13-04-2023. பேச்சும் புன்னகையும். - நதுநசி.
#கவிதை
#சிரிப்பு
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#smile
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

பேச்சும் புன்னகையும்.
*************************************
கனவில் கூடவா
கதை பேசி மகிழ
மறுத்து விட்டு நீ
விலகிப் போகிறாய்.
எனக்கும் இருக்கிறது.
உனக்கு இருப்பது
போலவொரு மனம்.
அதுவும் அழுமடி.
ஆசைப்பட்டு நான்
கேட்டது ஒன்று தான்.
ஈற்றில் மூச்சடங்கி
மடியும் வரை பேசிட.
பேசிட மறுத்து இப்போ
என்னைக் கொல்லும்
எண்ணம் ஏனோ சொல்.
என்ன தொல்லை ஆனது.
எட்டி நின்று நான்
ஒரு சொல் பேசிட
சின்னதாக நீ உதிரும்
அந்த புன்னகைக்காக.
இன்றல்ல என்றுமே
உன் புன்னகையும்
ஒரு சொல் பேச்சும்
என் உயிர் என்பேன்.
....... அன்புடன் நதுநசி.



