இன்றைய கவிதை 14-04-2023. பாசம் விதைத்து நல்ல உறவுகள் வளர்த்தாலென்ன? - நதுநசி.

பாசம் விதைத்து நல்ல
உறவுகள் வளர்த்தாலென்ன?
**********************************************
நெஞ்சோடு நஞ்சை
பஞ்சோடு நெருப்பாக
செருப்போடு காலாய்
இருப்பாய் என்னோடு.
புரிந்திட கூடவா
தெரிந்திட முடியாது?
இருந்திட வழியதை
அறிந்திட முனைவேன்.
நெருப்போடு பஞ்சு
பருப்போடு வாழும்
உடல் போல கண்டேன்.
கடல் போல மக்கள்.
கூட இருந்தே குழி
கூடித் தோண்டித் தள்ளும்
குள்ளநரித் தனம்
உள்ளவரைக் கண்டேன்.
புன்னகை தந்து என்னை
உவகை கொள்ள வைத்து
கொள்ளையிட்டு அவர்
கொடுந்துயர் செய்வாரோ?
ஆச்சரியம் இருக்கும்
அது அழகாய் இருக்கும்.
அறிவோடு அவர் எனை
அறைந்து ஏமாற்றுவதால்.
மழைக்கு காளான் வளர
மனசுக்கு பிடிக்கும் பார்.
பிடுங்கி அரிந்து அதை
இடுங்கி கரிந்து உண்பாரே!
இனத்தை பெருக்க கோழி
இட்ட முட்டை சட்டியில்.
கோழி அறுத்து குழம்பில்
கொதிக்க வைத்து வயிற்றில்.
பேச்சு பேசுவார் வந்து
போச்சு எல்லாம் இங்கே.
எச்சில் இருக்காது உண்மை
காட்சிக் கோலத்தில் பாவம்.
மீனுக்கும் இருக்கும்
மிதமான வாழ்வுக்கு.
உணர்வென கண்டால்
உணவாக எப்படி ஆகும்?
தன் நலம் தேவை
தரணி வாழ மனிதர்.
அது சார்ந்தொரு நீதி
அறிந்து கொள்ளவோ?
எரியும் மனச்சாட்சி
எடுத்துப் பேசும் போது
இன்னொரு பக்கத்தில்
இரக்கமற்ற வாழ்வோடு.
ஏழைகள் தோன்ற
ஏது வழியென காண்டேன்.
உதவிட வந்தவரும்
உளமாரா செய்வாரோ?
கேடு நினைத்து நாம்
கெட்டுப் போவதேனோ?
பாடுபட்டு இந்த பூமியில்
பாசம் விதைத்தால் என்னவோ?
நஞ்சை கலந்து
உண்ணக் கொடுத்து
உயிர் வாழச் சொல்லும்
உயர்ந்த குணம் நீங்காதோ
....... அன்புடன் நதுநசி



