இன்றைய கவிதை 15-04-2023. தாயைப் போற்றி வாழ நாயானேன் நானிங்கே! - நதுநசி.

#கவிதை #அன்னை #இன்று #தகவல் #லங்கா4 #Poems #Mummy #today #information #Lanka4
இன்றைய கவிதை 15-04-2023. தாயைப் போற்றி வாழ நாயானேன் நானிங்கே! - நதுநசி.

தாயைப் போற்றி வாழ
நாயானேன் நானிங்கே!
***************************************

அன்னைக்கு என்னை
பிரித்துப் பார்க்க
ஏனோ தெரியாது பார்.
என்னோடு அவள்.

நின்றாடும் தென்றல்
அவள் பாடும் பாடலை
சுமந்து வந்து காதில்
போட்டுப் போனதே!

நெஞ்சோடு அணைத்து
இதயம் துடிக்கும் அந்த
சந்தம் தந்தவள் அன்னை.
ஏனோ எனை ஈன்றால்?

தன் பெற்ற இன்பம்
இந்த வையகம் பெற.
வளர்த்தெடுத்து எனக்கு
அதைச் சொல்லிப் போக.

பிறப்பால் பரம்பரை
தந்துவிட்டு இருந்தாள்.
குணத்தால் வளர்த்து
உலகம் வியக்க விட்டாள்.

அன்பை குழைத்து
சோற்றோடு பழமும்
பிசைந்தூட்டும் அன்னை
என்னை தாங்கினாள்.

காற்றிடை தனியே
கானகம் போல வாழ்வு.
கடலிடை மீன் போல
கண்ணீர் கலந்த வாழ்வு.

தந்தை வழி வந்த
துயர் மறந்து வாழ
தாய் வழி வந்த துயரும்
மறைத்து போனவள்.

துயரின் வாழ்வில்
அவள் சுமந்த வலி.
வளர்ந்த பின்னே
நான் கண்ட உண்மை.

பசித்த எனக்கு ஊட்டி
பசிக்க கிடக்கும் குணம்.
எனக்கும் பிள்ளை இப்போ
அப்போ புரிந்தது எல்லாம்.

காலம் கடந்த போதும்
அன்னை நாமம் கூட
நம்மை வாழ வைக்கும்
அந்த அன்னை தெய்வம்.

தேசம் எங்கும் தேடியும்
அம்மா போல ஒரு சொல்
இல்லை கண்டேன் நான்.
அழுத போதும் நாவில்.

எந்திப் போன பின்னும்
ஏங்கிக் கிடக்கும் மனது.
ஏக்கம் போக்க வந்து
பிள்ளை என்பாள் அன்னை.

என்ன செய்து தீரும்
அந்த அன்புக் கடன்.
தாயைப் போற்றி வாழ
நாயானேன் நன்றியோடு.
                                                         
                                      ........ அன்புடன் நதுநசி