IPL Match21 - லக்னோ அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி

#India #IPL2023 #Lucknow #Punjab #win #T20 #Tamilnews #Sports News #Lanka4
Prasu
1 year ago
IPL Match21 - லக்னோ அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி

16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இறங்கினர்.

இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். கைல் மேயர்ஸ் 29 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 2 ரன்னில் வெளியேறினார். 

குருணால் பாண்ட்யா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்டாய்னிஸ் 15 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்னில் அவுட்டானார். பஞ்சாப் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. 

இதில் அதிகபட்சமாக சிகந்தர் ராசா அரை சதம் எடுத்து 57 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து, மேத்யூ ஷார்ட் 34 ரன்களும், ஹர்பீத் சிங் பாட்டியா 22 ரன்களும், சாம் குர்ரன் மற்றும் பஹர்பீத் பிரார் தலா6 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 4 ரன்களும் எடுத்தனர். 

ஷாருக்கான் 13 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடினார். இறுதியாக களமிறங்கிய ரப்பாடா ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. இறுதியில் 19.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!