திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, அதிகாலையிலேயே கோயிலுக்குச் சென்ற அவர்கள், நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன.
வளாகத்தில் மெகா திட்டம் நடந்து வருவதால், ரதவீதி, தெப்பக்குளம் பகுதி, நெல்லை ரோடு, ரயில் நிலையம் பகுதி, டி.பி. சாலை, பேருந்து நிலையம் பகுதி போன்ற இடங்களில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தியுள்ளனர். நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர்.