இன்றைய கவிதை 17-04-2023. இனங்கள் முரணோடு.. - நதுநசி.
#கவிதை
#இனம்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
1 year ago
இனங்கள் முரணோடு
========================
புத்தம் புதிய
காலை இது.
புழுகுனி முத்தம்
வந்து கத்தும்.
மைனாவும் கூடி
கூச்சல் போடும்.
பச்சைக் கிளியும்
வாழையில் அமரும்.
முற்றத்து செவ்வந்தி
இதழ் விரித்து
புன்னகை செய்தாள்.
புதுப் பொலிவோடு.
நிலவு விடைபெற்று
கிழக்கே வந்த
ஆதவனுக்கு தன்
விடை கொடுத்தது.
இருள் ஓடி மறைய
ஒளி வந்து சிரிக்கும்.
அது போல் இங்கே
நம் வாழ்வு சிறக்கும்.
கவலைகள் மறந்து
கனங்கள் கடந்திட
இனங்கள் இங்கே
முரண்கள் விடுமா?
......... அன்புடன் நதுநசி.