இன்றைய கவிதை 18-04-2023. மழலை நமக்காக.-நதுநசி.
#கவிதை
#குழந்தைகள்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#baby
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

மழலை நமக்காக
******************************
சின்ன மொட்டு
இதழ் விரித்து
மெல்லச் சிரிக்கும்
மழலை நாம்.
சொல்லிச் செல்லும்
நல்ல சொல்லும்
அம்மா பேச்சில்
நாளும் இருக்கும்.
நல்ல செயல்
எல்லாம் இங்கே
தந்தை செயலால்
தானே நடக்கும்.
அண்ணா போல
தம்பி நடக்கப் பார்த்து
அக்கா போல
தங்கை நடந்திடுவாள்.
நல்ல குடும்பம்
நலம் தானே வாழ
மழலை நமக்கு முன்னே
பெரியோர் நடப்பார்.
நாளை நாம் வாழும்
வழிகள் பழகலாம்.
நல்ல உறவு சொல்லும்
நற்பழக்கம் வழியே!
வீட்டில் இருக்கும்
படிக்கும் பழக்கம்.
பள்ளியும் கூட
வீடு போல இருக்கும்.
மழலை நாம் சிரிக்க
சிந்தனை வழி
நல்ல பழக்கம் சொல்லி
வளர்ப்பார் நாட்டில்.
......... அன்புடன் நதுநசி



