தாலி செய்து தருவதாக கூறி பணத்தை பெற்றுவிட்டு தண்ணி காட்டியவர் கைது!

#Police #Arrest #Jaffna #Robbery #Gold #Lanka4
Kanimoli
3 years ago
தாலி செய்து தருவதாக கூறி பணத்தை பெற்றுவிட்டு தண்ணி காட்டியவர் கைது!

தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவான நபர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர், திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.

அவற்றின் பெறுமதி 12 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல் நாள் தாலியை தருவதாக உறுதி அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், திருமணத்திற்கு முதல் நாள் தாலியை வாங்க சென்ற போது, அவரது கடை மூடப்பட்டு இருந்தது.அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்ட போது, தொலைபேசி துண்டிக்கப்பட்டு இருந்தது. 

அதனை அடுத்து மணமகன் வீட்டார், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4