IPL Match25 - ஐதராபாத் அணிக்கு எதிராக 192 ஓட்டங்களை குவித்த மும்பை அணி

#India #IPL #T20 #Mumbai #hyderabad #Tamilnews #Sports News #Lanka4
Prasu
3 years ago
IPL Match25 - ஐதராபாத் அணிக்கு எதிராக 192 ஓட்டங்களை குவித்த மும்பை அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்கள், இஷான் கிஷன் 38 ரன்கள் சேர்த்தனர். 

அதன்பின் களமிறங்கிய கேமரான் கிரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தார். மறுமுனையில் சூரியகுமார் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.  

அவரைத் தொடர்ந்து கேமரான் கிரீனுடன் இணைந்த திலக் வர்மா, ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 17 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 37 ரன்கள் விளாசிய நிலையில் அவர் ஆட்டமிழந்தார். 

டிம் டேவிட் 16 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்த கேமரான் கிரீன் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் சேர்க்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது. 

ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சென் 2 விக்கெட் எடுத்தார். புவனேஸ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4