இன்றைய கவிதை 19-04-2023. உண்மைகள் திரிந்து மெல்ல மாறுகையில். -நதுநசி.

#கவிதை #உண்மை #இன்று #தகவல் #லங்கா4 #Poems #true #today #information #Lanka4
இன்றைய கவிதை 19-04-2023. உண்மைகள் திரிந்து மெல்ல மாறுகையில். -நதுநசி.

உண்மைகள் திரிந்து
மெல்ல மாறுகையில்
+++++++++++++++++++++++

நினைந்துருகி நாம்
நினைத்துக் கொண்டு
கடந்து போகின்றோம்.
நடந்தவற்றை மட்டும்.

இன்று  நடப்பவை 
நமக்காகவே தான்.
நாளை நமது காலம்
வளமாகும் என்பதற்காக.

ஆனாலும் இல்லை.
நாளை நாம் இருந்த
இடம் மட்டுமல்ல.
இருந்த தடமும் கூட.

காணாமல் போகும்.
மறைக்கப்பட்டு போகும்
மறந்து போகும். - பின்
அகழ்வுகளில் தேடலாம்.

ஈழத்தில் பாரும்
அகழ்வுகளில் கூட
அகப்படாத படி
அழிப்பு நடக்கிறது.

தமிழர் மனங்கள்
மிதந்து தான் கடக்கிறது.
சிறுக கிடைக்கும்
சுகபோகத்தால் பாரும்.

நினைவுகள் தேடி 
ஓடி போகும் போது
புனைவுகள் வழியில்
திளைத்து போகிறது.

உண்மையை உறைக்க
உரத்துச் சொல்லும்
நூல்கள் கிடக்கிறது.
தேடுவாரற்று தான்.

காலம் தவறாத
கல்லறை நினைவுகள்.
மெல்லச் சாகிறது
உண்மை நிலை.

களத்தில் நின்று
சொன்ன சொற்கள்
மறந்து போகிறது.
புனைவுகள் நினைவாக.

நிதர்சனம் செத்து
நிகழ்வுகளால் பூசப்பட
நாளை மாறிப்போகும்
அன்று நடந்த சுவடு.

களம் நின்று பலர்
தாம் சுமந்த நினைவு
அவரோடு மறைந்து
போவதை தடுக்கலாமே!

இன்று அவர் தான்
ஏழைகள் என்றாச்சே!
பெயருக்கு வரும் உதவி
உடல் சுமக்கும் உயிருக்காக.

மனம் சுமக்கும் வலிக்கு
மருந்தாக வருமா 
அன்று கதாநாயகர்கள்.
இன்று கதை நாயகராக.

ஆனாலும் வாழ்கிறார்.
உண்மைகள் நம்
சொற்களில் வாழ்ந்திட
திரிந்து போவதை அறியாது.

                                                                                      ......... அன்புடன் நதுநசி

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!