போதைக்காக பயன்படுத்தப்படும் பெருந்தொகையான மாத்திரைகளுடன் ஒருவர் கைது

#drugs #Police #Arrest #Airport #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
போதைக்காக பயன்படுத்தப்படும் பெருந்தொகையான மாத்திரைகளுடன் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் போதைக்காக பயன்படுத்தப்படும் பெருந்தொகையான மாத்திரைகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உப பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (18) இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய வருகை முனையத்தில் கைது செய்யப்பட்ட நபரின் பயணப்பொதிகளை சோதனை செய்ததில், 34 கிலோகிராம் மொத்த எடையுள்ள 60,460 போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4