உடல்நல குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நேபாள ஜனாதிபதி

#Nepal #President #Hospital #Delhi #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
உடல்நல குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நேபாள ஜனாதிபதி

நேபாள அதிபர் ராம்சந்திர பவுதல் (வயது 78) கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 1ம் தேதி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

நேற்று மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து காத்மாண்டுவில் உள்ள டியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அவருடன் அவரது மகன் சிந்தன் பவுதல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4