கேரளாவில் பாரிய நிலச்சரிவு காரணமாக மூவர் உயிரிழப்பு

#India #Death #Lanka4 #HeavyRain #Kerala #Missing #landslide #L4
Prasu
1 hour ago
கேரளாவில் பாரிய நிலச்சரிவு காரணமாக மூவர் உயிரிழப்பு

கேரளா வயநாட்டில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி அருகேயுள்ள கல்லாடி பகுதியில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட இரட்டைச் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில், கட்டுமானப் பணியின்போது வெட்டப்பட்ட மண்மேடு சரிந்து விழுந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் உள்ளூர் மக்களால் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4