இன்றைய கவிதை 20-04-2023. பாடுகள் சுமந்து பாவிகள் எமை காத்தவர். -நதுநசி.
#கவிதை
#கடவுள்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#God
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

பாடுகள் சுமந்து
பாவிகள் எமை காத்தவர்.
******************************************
பாடுகள் சுமந்து
பாவம் போக்கிட
இரக்கம் கொண்டு
இரங்கி வந்தார்.
சிலுவை சுமந்து
சிரம் தாங்கினார்.
முள் முடி தனை அவர்
முரண் விட்டு வாழ.
மன்னிக்க கேட்டு
மன்னித்து விட்டு
மறைந்து போன
மகான் யேசு பிரான்.
நல்ல சிந்தனை
நலம் வாழ நமக்கு
தந்த இறைவன்
தந்தை போலவர்.
மீட்புக்கு வந்த
மீட்பரவர் யேசு.
மீளும் படி தானே
மீனுமாகிய இலாபம்.
சுற்றம் கூடி
சுமந்த சிலுவை
குருத்தோலை அதை
குலவியொரு சிலுவை.
கல்வாரி படுக்கை
உயிர்த்த ஞாயிறு
நமக்கு சொல்லும்
நற்சிந்தனை என்னவோ?
இறப்பும் பிறப்பும்
கடந்த இறைவன்.
நம்மைக் காத்திட
நமக்காக வந்திடுவார்.
........ அன்புடன் நதுநசி



