அசத்திய சிராஜ்: பஞ்சாப் அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி
பெங்களுரு அணியின் கேப்டனாக இன்று விராட் கோலி செயல்படுகிறார். டு பிளசிஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார். தொடக்க வீரர்களாக விராட் கோலி , டு பிளசிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர். பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். தொடர்ந்து ஆடிய டு பிளசிஸ் , விராட் கோலி இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடக்க விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் கோலி 47 பந்துகளில் 59ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அடுத்த பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து டு பிளசிஸ் 56 பந்துகளில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு 174ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 175ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது, . தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடினார். அவர் 46 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடி போராடி 41 ரன்னில் அவுட்டானார். இறுதியில், பஞ்சாப் அணி 150 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் முகமது சிராஜ் 4 விக்கெட்டும் ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.