அம்பாறையில் 15 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

#Ampara #GunShoot #Death #School Student #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
அம்பாறையில்  15 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அம்பாறை மாயாதுன்ன பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாயதுன்ன பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த மாணவன் வீட்டின் பின்புறம் உள்ள இடத்திற்குச் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

வீட்டில் இருந்த உரிமம் இல்லாத  துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4