பாகிஸ்தானில் சாலையோர குடிசைகளில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு

#Pakistan #Accident #Death #Hospital #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
பாகிஸ்தானில் சாலையோர குடிசைகளில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லோத்ரன் மாவட்டம் துன்யாபூர் நகரில் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. 

பின்னர் சறுக்கிய லாரி, சாலையோரம் உள்ள குடிசைகள் மீது பாய்ந்தது. குடிசைகளில் வசித்தவர்களில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். 

4 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இறந்தவர்களின் உடலை மீட்டதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4