நிவாரண அரிசிக்கு கட்டணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு!

#SriLanka #sri lanka tamil news #srilankan politics #Lanka4 #Tamil People #Tamil #Tamilnews
Prabha Praneetha
3 years ago
நிவாரண அரிசிக்கு கட்டணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு!

கண்டி - தெல்தொட்டை – பாலுகம பகுதியில் நிவாரணத்தின் அடிப்படையில் அரிசியை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அரிசியை பெற்றுக் கொள்ள சென்ற மக்களிடம் இருந்து தலா 50 ரூபா கட்டணம் அறவிடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் சமுர்த்தி அதிகாரிகளின் ஊடாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசியை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் அரிசி வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் தெல்தொட்டை – பாலுகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி அரிசி வழங்கப்பட்ட போது அதனை பெற்றுக் கொள்ள சென்றிருந்த மக்களிடம் தலா 50 ரூபா கட்டணம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4