அதிக வெப்பநிலை காரணமாக தண்ணீரின் தேவை 10 வீதத்தால் அதிகரிப்பு

#water #hot #weather #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
அதிக வெப்பநிலை காரணமாக தண்ணீரின் தேவை 10 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.கே.ரணதுங்க  தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரை வீட்டுத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் அதிக வெப்பம் மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4