இன்றைய கவிதை 24-04-2023. ஏழையும் கூப்பிய கையோடு வந்தார். - நதுநசி.

#கவிதை #ஏழை #இன்று #தகவல் #லங்கா4 #Poems #poor man #today #information #Lanka4
இன்றைய கவிதை 24-04-2023. ஏழையும் கூப்பிய கையோடு வந்தார். - நதுநசி.

ஏழையும் கூப்பிய
கையோடு வந்தார்.
********************************

வந்து பாருங்கள்
வற்றாப்பளை தான்.
எல்லாம் உண்டு.
எண்ணங்கள் போல.

எண்ண முடியாத
மனக் குழப்பத்தில்
குழம்பிய நான்.
சொல்ல முனைய.

ஏழையும் கூட 
கூப்பிய கையோடு.
ஏற்றம் கண்டோரும்
கூப்பிய கையோடு.

கண்ணகியை வணங்கி
கண்கொண்டு கண்டு
இன்புற்று கழிக்க
இந்த பிறப்பு நலமாக.

வீடு மாற்றி பசியதை
விடுக்கும் வழியதை
இந்த படைப்பு 
இனியாகிலும் தருமா?

பிச்சை கேட்டு
கையேந்தும் மனிதர்.
அமுசு வண்டியில் 
வந்தவர் அமுதூட்ட.

அழுக்காடை போர்த்தி
அழுதிடும் உணர்வோடு
உதடு மலர்ந்து பலர்
நடந்து திரிகிறார்.

ஆடைக்கு நிறம் 
அழ கூட்ட அணிகலன்
போட்டவர் நடை போட
எல்லாம் காணலாம்.

விலையேறிய கற்பூரம்
வாங்கியதை எரிக்க
எரிகிறது பணம் அப்போ.
வயிறு பசிக்கிறது.

ஏழையும் கூட இதை
சிந்தை கொள்ளாது செய்ய
கொள்கை மாற்றம் வந்து
வாழ்வை மாற்றாதோ?

கோடி கொட்டும் இந்த
கோவில்கள் இங்கே
ஏனோ ஏழைகள் மாறி
நலம் வாழ சொல்லாதோ?

அறநெறி கருத்ததை
உரைத்திங்கு  வாழ
கேட்டுப் போகும் போது
பிழைப்புக்கு சொல்லாதோ?

ஏழைகளை ஆக்கி வைத்து
முயன்றவர் வாழ்ந்திட
வழியது கிடக்கு பரவி
என்றுரைத்தால் ஏற்குமோ?

பலர் உழைக்க இந்த
திருவிழா வழியாகும்.
உண்மை இது என்பார்.
நம்பிடப் பொருந்தும்.

உண்மையை மறைத்து
உளறிச் செல்லும் சொல்லும்
உண்மை போல இருக்கும்.
மாற்றம் என்ன ஆகும்.

ஏமாற்றி பிழைத்தவர்
நெறி மாறியதை
மறைத்திட ஓதும் வேதம்
யாரிக்கிங்கு வேண்டும்?

நான் சொன்னதால்
என்னோடு மோதும் 
எண்ணம் விட்டு நடவும்.
மாற்றம் ஏதும் ஆகும்.

                                                                                               ......... அன்புடன் நதுநசி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!