ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

#Tamil Nadu #Tamil People #Tamil #Tamilnews
Mani
3 years ago
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் குரூப்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜி ஸ்கொயர் நிறுவனம் திருச்சி, கோயம்புத்தூர், பெங்களூர், ஹைதரபாத் உள்ளிட்ட இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

நிலங்களை வாங்கி குடியிருப்புகளாக கட்டி விற்பனை செய்வதுடன், நிலங்களாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவன தலைமை அலுவலகம் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வீடுகள், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அவரது மகன் கார்த்திக் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு பணிக்கு மாநில போலீசாரை அழைக்காமல், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை வைத்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4