மரண அறிவித்தல் - எழுத்தாளர் குப்பிளான் ஐ சண்முகலிங்கம் 

#Death #Jaffna #SriLanka #Lanka4
Kanimoli
1 year ago
மரண அறிவித்தல் - எழுத்தாளர் குப்பிளான் ஐ சண்முகலிங்கம் 

குப்பிழானைப் பிறப்பிடமாகவும் மாணிக்கவளவு கரணவாய் தெற்கு கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், ஆசிரியர் குப்பிழான் ஐ. சண்முகலிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியர் - நெல்லியடி மத்திய கல்லூரி) அவர்கள் 24.04.2023 திங்கட்கிழமை காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற ஐயாத்துரை - இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற மயில்வாகனம் - தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

புனிதவதி (ஓய்வுநிலை ஆசிரியர் - அம்பாள் ரீச்சர் -உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) பாசமிகு மனைவியும்,

சுகன் யாவின் அன்புத் தந்தையாரும், செந்தூரன் (ஆசிரியர் - கனகராயன்குளம் மகாவித்தியாலயம்) அன்பு மாமனாரும் ஆவார். 

குமாரலிங்கம், மணிமேகலை, முருகலிங்கம், ரூபாவதி, சுந்தரவதனி, காலஞ்சென்ற கந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

இறுதிக் கிரியைகள் இன்று 24.04.2023 மதியம் 12 மணியளவில் மாணிக்கவளவு கரணவாய் தெற்கு கரவெட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து 2 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ந்து தகனக் கிரியைகள் உப்புவல்லை சந்தியில் உள்ள பூவரசந்திட்டி மயானத்தில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தொடர்புகளுக்கு
புனிதவதி (மனைவி) 0776158894
சுகி - (மகள்) 0764062731