உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் தொடர்பாக இன்று விசேட கூட்டம்

#SriLanka #sri lanka tamil news #srilankan politics #srilanka freedom party #Meeting
Prabha Praneetha
3 years ago
உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் தொடர்பாக இன்று விசேட கூட்டம்

2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பாக விசேட கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது.

10 பாடங்கள் தொடர்பான விடைத்தாள்களை குறிக்கும் ஆரம்ப கட்டம் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்து தர்மம், கிறிஸ்தவ தர்மம், இந்து நாகரீகம், சித்திரக் கலை, கர்நாடக இசை, மேற்கத்தேய இசை, நாடகமும் அரங்கியலும், ஹிந்தி உள்ளிட் 10 பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகளை இந்த வாரத்தில் ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4