ஆயுதப்படை மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர்களின் கவனத்திற்கு

#Sri Lankan Army #Police #hot #weather #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
ஆயுதப்படை மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர்களின் கவனத்திற்கு

வெப்பமான காலநிலை குறையும் வரை முப்படையினர் உட்பட அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோரின் கடமை தொடர்பில் நிறுவனங்களின் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர், நிபுணர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அதிக ஆபத்துள்ள காலங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பணி மாறுதல்களை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது நல்லது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்தியாவசிய கடமைகளை செய்யும் பணியாளர்கள் அந்த சேவைகளை செய்யும் இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த தேவையான வசதிகள் வழங்கப்படுவதை நிறுவனங்களின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4