புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் குழப்பம்

#Minister #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Health #Health Department
Prathees
3 years ago
புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் குழப்பம்

புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களால் சுகாதார அமைச்சின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது.

புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பி வருவதால் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை காரணமாக அமைச்சின் சில அதிகாரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமைகள் தொடர்பில் சுகாதார அமைச்சரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4