இன்றைய கவிதை 25-04-2023. நாளை நலமாகிட முகிழட்டும் புது முளை. - நதுநசி.
நாளை நலமாகிட
முகிழட்டும் புது முளை.
**************************************
இன்று நடப்பவை
நாளை நமக்கு
நன்மை என்றாகும்.
வாழ்வு மகிழ்ந்திட.
இது உணர்ந்து
பொறுமை கொண்டு
செயல் காத்து நாம்
ஆற்றல் கடினமோ?
போற்றும் வகை
வேண்டாம் இங்கு.
தூற்றும் வகையது
இல்லை என்றாகட்டும்.
நன்மை கண்டு
மகிழும் மனம்
பெற்று வாழும்
வாழ்வு வேண்டும்.
தொல்லை தடுத்து
நெல்லை விதைத்து
கள்ளை அள்ளி
உண்டு மகிழலாம்.
மண்ணில் நாம்
விதை விதைத்து
அது முற்றி வர
அறுத்து சேர்க்கலாம்.
வம்புச் சண்டை
வாய்ச் சேட்டை
கைகலப்பு எல்லாம்
நாளை என்ன தரும்?
கூடி வாழாத போதும்
பிரிந்து வாழும்
நிலையதை தடுப்போம்.
காணும் போது பேசி.
சின்ன கோபமும்
நெடுநாள் காவிவர
காழ்ப்புணர்வு கூடி
உறவை பிரிக்கும்.
புரிந்து நடந்திட
மறந்து கடப்போம்.
திரும்ப நடந்திடும்
எண்ணம் தொலைத்து.
வண்ண வண்ண
வண்ணத்தி போல.
தேனை தேடி நாம்
பூவோடு கூடலாம்.
மகரந்தம் நுகர
மணிகள் உடைந்து
கருக்கள் கூட
துணையதாய் மாறலாம்.
தென்றலும் வந்து
மெல்ல கிசுகிசுக்க
பசி கூட வந்து
எமை சீண்டுமோ?
வாழ்வு மகிழ்ந்து
நாளை நலமென
புது முகிழ் கொள்ள
இன்று நலமாகட்டும்.
........ அன்புடன் நதுநசி