பனை மரங்களை அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஏற்றிச் சென்றவர் கைது!

#Police #Arrest #Jaffna #Lanka4
Kanimoli
3 years ago
பனை மரங்களை அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஏற்றிச் சென்றவர் கைது!

உழவு இயந்திரத்தில் பதினொரு பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடன் அனுமதிப்பத்திரங்கள் எவையும் இருக்கவில்லை.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் பனை மரங்கள் அழிக்கப்படுவதாக காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் அசேல அத்துக்கார அவர்களது தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த கைது நடவடிக்கை முன்னெடுத்தனர்.

குறித்த சந்தேக நபர், உழவு இயந்திரம் மற்றும் பனைமரக் குற்றிகள் என்பவற்றுடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாக நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4