போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

#drugs #Police #Arrest #Lanka4
Kanimoli
3 years ago
போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

இன்றைய தினம், அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆவரங்கால் மேற்கு, வன்னியசிங்கம் பகுதியில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிசாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4