IPL Match35 - மும்பை அணிக்கு எதிராக 207 ஓட்டங்களை குவித்த குஜராத் அணி
ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர் விர்திமான் சஹா 4 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, மற்றொரு துவக்க வீரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 56 ரன்கள் குவித்தார்.
மறுமுனையில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 13 ரன்களிலும், விஜய் சங்கர் 19 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின், டேவிட் மில்லர்- அபினவ் மனோகர் ஜோடி, மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அபினவ் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
மில்லர் 22 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் அடித்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
ராகுல் தெவாட்டியா 5 பந்துகளில் 20 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட் கைப்பற்றினார். அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டாப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.