இன்றைய கவிதை 26-04-2023. விரும்பி வந்தால்....-நதுநசி.
#கவிதை
#காதல்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#Love
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

விரும்பி வந்தால்.
***************************
நானும் உன்னோடு
கை கோர்த்து நடக்க
என்னோடு நீயும் தான்
சேர்ந்து வருவாயோ?
சோகம் பகிர்ந்து நாம்
நம்மைத் தேற்றலாம்.
நாளை நமதென நாம்
நாளும் இங்கு வாழலாம்.
உதவிக்கு உதவியாக
நானும் நீயும் சேர்ந்தால்
சேதாரம் இங்கே இல்லை.
ஆதாரம் தானே சேரும்.
உழைத்து நாம் வாழ
தொழிலதை கொண்டு
அதை ஆக்கி வாழும்
வாழிகள் தேடுவோம்.
இல்லை என்றதை
மறந்து போகலாம்.
இயலாதது எனவொன்று
இருக்காது நம்மிடம்.
எண்ணிப் பாரு
எட்டிய அறிவுக்கு.
விரும்பி வந்தால்
நலமன்றி வேறேது?
........ அன்புடன் நதுநசி.



