இன்றைய கவிதை 27-04-2023. நமக்கு நாமே தான் சொல்லிக் கொள்வோம். - நதுநசி.
#கவிதை
#பேச்சு
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
Mugunthan Mugunthan
1 year ago
நமக்கு நாமே தான்
சொல்லிக் கொள்வோம்.
***************************************
எப்படி நடந்து நாம்
எந்த நிலையிலும்
எண்ணம் போல வாழ.
ஏங்கும் போது சொல்.
நமக்கு நாமே தான்
நடந்து கொள்ளும்
நல்ல வழிகளை சொல்.
நாளும் நலமாகும்.
அடுத்தவரோடு பழக
அடுத்தடுத்து நீயும்
அன்பைக் கொண்டு
அடி எடுத்து வை.
விரும்பி பேசு.
விரும்பாது போனால்
விலகிப் போக.
விரும்பி நீ நினை.
உதவி கூட பார்
உன்னிடம் நாடி வந்து
உண்மை சொல்லி அதை
உன்னைக் கேட்கட்டும்.
நாடி நலம் வாழ
நாட்டில் தேடி ஓடி
நாலு மனிதர் மகிழ
நாணம் கொண்டு செய்.
செய் நன்றி சொல்லி
செய்திட உணர்த்து.
செயல்வழி வாழ்வு
செயற்கரிய செயல்.
வார்த்தைகள் கொஞ்சம்
வாழும்படி பேசு.
வாழ்வில் அதை மறக்க
வாசம் இழந்த பூவாகிடும்.
........ அன்புடன் நதுநசி