IPL Match37 - 203 ஓட்ட வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கியுள்ள சென்னை அணி

#India #IPL #T20 #Chennai #Sports News #Rajasthan
Prasu
3 years ago
IPL Match37 - 203 ஓட்ட வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கியுள்ள சென்னை அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

 டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் ஜாஸ் பட்லர் சிறப்பான ஒத்துழைப்பை வழங்க. ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 

86 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஜாஸ் பட்லர் 27 ரன்களில், ஆட்டமிழந்தார். அதன்பின் சஞ்சு சாம்சன் 17 ரன்னிலும், ஹெட்மயர் 8 ரன்னிலும் அவுட் ஆகினர். இந்த சீசனில் மூன்றாவது அரை சதத்தை நிறைவு செய்த ஜெய்ஸ்வால், 77 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். 

 அவர் 43 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் இந்த ரன்னை எடுத்திருந்தார். கடைசிகட்டத்தில் கெத்து காட்டிய துருவ் ஜூரல் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள், அஷ்வின் ஆட்டமிழக்காமல் ஒரு ரன் எடுக்க, ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. 

 சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4