இங்கிலாந்து இன்னமும் பழைய காலத்திலேயே உள்ளது: சாடிய சீனா
இங்கிலாந்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவான் மீதான தாக்குதலும் இங்கிலாந்திலும் உலக அளவிலும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று, இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிலெவர்லி (James Cleverly) சீனாவை எச்சரித்திருந்தார்.
அதற்குப் பதிலளித்த சீனா, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்து இங்கிலாந்தை எச்சரித்துள்ளதுடன், இங்கிலாந்து இன்னமும் பழைய காலத்திலேயே இருப்பதாக சாடியுள்ளது.
அத்துடன், சீனா இங்கிலாந்து உறவை மேம்படுத்தி, அமைதி, நிலைத்தன்மையை ஏற்படுத்தச் செயல்படும்படியும் இங்கிலாந்தை சீனா வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, தைவான் நீரிணையில் கடற்படை சுற்றுக்காவல் தேவை என்று ஐரோப்பிய உயர் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார். அது குறித்து உச்ச விழிப்பு நிலையில் இருப்பதாகவும் சீனா அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.