IPL Match38 - வரலாற்று வெற்றியிலக்கை நிர்ணயித்த லக்னோ அணி

#IPL #T20 #Sports News #Lucknow #Punjab
Prasu
1 year ago
IPL Match38 - வரலாற்று வெற்றியிலக்கை நிர்ணயித்த லக்னோ அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மொகாலியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

 முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி, ஆரம்பம் முதலே பஞ்சாப் பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் குவித்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 11 ரன்னில் ஆட்டமிழந்தபோதிலும், மற்ற வீரர்கள் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 

 20 பந்துகளில் மிக விரைவாக அரை சதம் அடித்த கைல் மேயர்ஸ் மொத்தம் 54 ரன்கள் குவித்தார். ஆயுஸ் பதோனி 24 பந்துகளில் 43 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்களும் விளாசினர். 

 ஹாட்ரிக் பவுண்டரியுடன் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய நிகோலஸ் பூரன், 19 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்கள் சேர்த்தார். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது. 

ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 

 தீபக் ஹூடா 11 ரன்களுடனும், குருணால் பாண்ட்யா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் ரபாடா 2 விக்கெட் எடுத்தார். 

 இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!