செயற்கை கருத்தரித்தல் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் நாடாக சுவிஸ்
#Tamil People
#swissnews
#Tamil
Prabha Praneetha
1 year ago
சுவிட்சர்லாந்தில் செயற்கை கருத்தரித்தல் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .
செயற்கை கருத்தரித்தல் முறையில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அன்மைய நாட்களாக உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் சுமார் 2500 சிசுக்கள் செயற்கை கருத்தரித்தல் அல்லது IVF முறையில் பிறந்துள்ளன இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 13 வீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
நாட்டில் ஒவ்வொரு 30ஆவது குழந்தையும் இந்த செயற்கை கருத்தரித்தல் முறையின் ஊடாக பிறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு விடவும் 11 வீத அதிகரிப்பாகும் 111 தம்பதியினர் கரு முட்டைகளை தானம் செய்துள்ளனர்.
35 முதல் 39 வயது வரையிலான பெண்களே அதிக அளவில் செயற்கை முறையில் கருத்தரித்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.