பக்கிங்காம் அரண்மனைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் கைது
#Arrest
#UnitedKingdom
#Weapons
#KingCharles
Prasu
2 years ago

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையின் நுழைவு வாயிலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களை வீசினார். அந்த தோட்டாக்கள் அரண்மனையின் மைதானத்தில் விழுந்தது.
உடனே அந்த நபரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் ஜோசப் மெக் டொனால்ட் கூறும்போது, அரண்மனைக்குள் தோட்டாக்கள் வீசியது தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் சந்தேகத்திற்குரிய பை ஒன்று இருந்தது. அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவோ, அதிகாரிகள் அல்லது பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டதாகவோ எந்த புகாரும் இல்லை.



