12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

#SriLanka
Kanimoli
3 years ago
12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பில் இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக ஆனையிறவு பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

 இதன்போது அவர்களிடமிருந்து 5000 ரூபா மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்களும் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4