நிட்டம்புவில் பேருந்து விபத்து - 27 பேர் காயம்

#SriLanka #Accident #Hospital #Bus #Lanka4 #sri lanka tamil news #Injury
Prathees
3 years ago
நிட்டம்புவில் பேருந்து விபத்து - 27 பேர் காயம்

நிட்டம்புவ கஜுகம பகுதியில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு பேரூந்துகளின் சாரதிகளும் அடங்குகின்றனர்.

கண்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும் கொழும்பில் இருந்து மூதூர் நோக்கிச் சென்ற இபோ.ச பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 23 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் நான்கு பேர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4