IPL Match49 - சென்னை அணி 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

#IPL #T20 #Chennai #Mumbai
Prasu
3 years ago
IPL Match49 - சென்னை அணி 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது. அறிமுக வீரர் நேஹால் வதேரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, 64 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சென்னை அணி சார்பில் பதீரனா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அதிரடியாக ஆடினார். 16 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 30 ரன்களைக் குவித்தார். ரகானே 21 ரன்னிலும், அம்பதி ராயுடு 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

டேவன் கான்வே பொறுப்புடன் ஆடி 44 ரன்னில் வெளியேறினார்.

 இறுதியில், சென்னை அணி 140 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி 6வது வெற்றியைப் பதிவு செய்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4